Followers

பனிமழை பொழிந்திடும் பொழுதொன்றையொத்தகுளிர்ந்த கானமொன்றை இசைத்தபடிநீயனுப்பிய செய்தியினைக் காண்கிறேன், தேவதை விரல்களின் மந்திரக்கோல்ஆகாயத்திலிருந்துமயில்நீல வண்ணத்தை மட்டும் காத்திருந்து பெற்று வெண்பஞ்சு மேகங்களில் எழுதியனுப்பியது போலஎன் கைகளில் எடையின்றிக் கனக்கும் அச் சுபசெய்திஇரவுகளிலும் எனது வாழ்வின் அத்தனை இருள்களிலும் பல ஒளி மின்னல்களாக ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சுகையில்நரம்புகளில் இனிமையாய் அதிர்கிறது